Sunday, September 29, 2013


ஒரு துணைவி கணவனுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி கணவனின் பெற்றார் உடன்பிறப்புக்களை அனுசரித்து நடப்பது தான். 

அதேபோன்றே மறு பக்கமும்... விட்டுக் கொடுத்தல் என்று வந்தால் இளையவர்கள் முந்திக் கொள்ள வேண்டும், அறிவு அனுபவ முதிர்ச்சியுள்ள பெரியவர்கள் சகித்துக் கொண்டு செய்வார்கள்.. 

ஆனால் எந்தவொரு கட்டத்திலும் தனது குடும்ப சூழலில் தன துணைவிக்கு அநீதிகள் இழைக்கப் படாது அவதானமாய் நடந்து கொள்வது கணவனின் கடமையாகும். 

கற்காத ஒரு பாமார தாய்க்கு (தந்தைக்கு) நன்கு கற்ற ஒரு மகன் இருக்கலாம், அல்லது ஏழை பெற்றாருக்கு பணக்கார மகன் இருக்கலாம் அவர்கள் தமது தகைமைகளுக்கு ஏற்ப துணைகளை தேடுவது இயல்பு...

கற்ற துணைவியோ, வசதிபடைத்த பெண்ணோ தங்கள் கணவர் எந்த கண்கொண்டு தாய் தந்தையரை பார்க்கின்றாரோ அதே கண் கொண்டே தாமும் பார்க்க வேண்டும்.

உனக்கு அநீதி இழைத்திறுப்பினும் கூட உனது பெற்றார்களை அனுசரித்தே வாழ வேண்டும் என்பதே ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களது உபதேசமாகும்.

பொதுவாகவே மாமி மருமகள் விரிசல் பாமரத்தனமான உரிமை கொண்டாடல் மூலமே ஏற்படுகின்றது. பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களின் பாமரத்தனதுக்கு முன்னால் விட்டுக் கொடுப்பது ஒருவரை ஒருவர் நேசிக்கும் உண்மையான கணவன் மனைவியின் பண்பாடாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு துணைவியும் நாளை நாங்களும் தாயுடைய அந்தஸ்தில் வைத்து போற்றப் படும் உயரிய பண்பாட்டை வீட்டுச் சூழலில் கட்டிக் காக்க வேண்டும்.

இணை வைத்தலையும், இறைகட்டளைகளுக்கு மாறு செய்யுமாறு பணிப்பதனையும் தவிர தாய் தந்தையரை இரத்த பந்தங்களை வேறு எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க இஸ்லாத்தில் இடமில்லை. (இருபக்கமும் தான்)

அதுவே நாம் எமது எதிர்கால வாழ்விற்கு செய்துகொள்ளும் மிகச் சிறந்த காப்பீடாகும்.

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்.

Ash Sheikh Dr. Masihudeen Inamullah PhD

0 comments:

Post a Comment