Monday, September 2, 2013



1. தஹஜ்ஜுத் தொழுகையின் போது

2. வெள்ளிக்கிழமை நாட்களில்

3. அதானிற்கும் இகாமத்திற்கும் இடையில்

4. பா்ழான தொழுகைகளின் பின்னால்

5. ஸுஜுத் செய்திருக்கும் நேரங்களில்

6. சஹருடைய நேரத்தில்

7. நோன்புடன் இருக்கும் போது

8. நோன்புதிறக்கும் நேரத்தில்

9. பிரயாணத்தின் போது

10. அநீதிக்குட்படுத்தப்பட்டால்

11. நீதமான ஆட்சியாளனின் துஆ

12. பெற்றோர் தம்பிள்ளைகளுக்காகக் கேட்கும் போது


மேலே குறிப்பிட்ட இந்த12 நேரங்களில் மட்டும்தான் அல்லாஹ் தன் அடியார்களின் பிறார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான் என்று பொருளளல்ல. இவை அதிகமாக அங்கீகரிக்கப்படும் நேரங்கள். மற்றைய நேரங்களிலும் அல்லாஹ் எமது பிறார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான்.

மனிதன் பாவம் செய்யும் நிலையிலேயே படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் விரும்புவதெல்லாம் தனது அடியான் பாவம் செய்துவிட்டால் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பதே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நீங்கள்பாவமே செய்யாத ஒரு கூட்டத்தினாராக இருந்தால் அல்லாஹ் உங்களை அழித்துவிட்டு பாவம் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தைக் கொண்டுவருவான். அவர்கள் பாவம் செய்வார்கள். இறைவனிடம் பாவமன்னிப்பும் தேடுவார்கள். அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்” (முஸ்லிம்)

இதன் பொருள் மனிதன் பாவம் செய்ய வேண்டுமென்பதல்ல. அவனால் இயல்பாகவே நடக்கும் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடவேண்டுமென்பதாகும். ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பைவிடவும் 99 மடங்கு அன்பைத் தன் அடியார்கள் மீது அல்லாஹ் வைத்திருக்கின்றான். எனவே அவன் கண்டிப்பாக மன்னிக்கக்கூடியவன். இதனை அவனே தனது வார்த்தைகளில் கூறுகின்றான்.

“உங்களது இரட்சகன் கூறுகின்றான் – நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள் நான் உங்களது பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன்.” (40:60)

“என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் (கூறுங்கள்) நிச்சயமாக நான் (அவர்களுக்கு மிகவும் சமீபமாகவே இருக்கின்றேன், பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு அவர் என்னை அழைத்துப் பிரார்த்தித்தால் பதிலளிப்பேன்.” (2:186)

அவனிடம் எமது தேவைகளைக் கேட்கவும் முறையிடவும் தரகர்கள் தேவையில்லை. ஏனெனில் அவன் எமக்கு மிக அண்மையில் இருக்கின்றான்.

“நாம் அவனது பிடரி நரம்பைவிடவும் மிக மிக அண்மையில் இருக்கின்றோம்” (30:16)

“உங்களது இரட்சகனது மன்னிப்பின்பாலும் சுவனபதியின்பாலும் விரைந்துவாருங்கள்.” (3133)

அவன் மன்னிப்பானா மாட்டானா என்று யாரும் நிராசையடைந்துவிடவேண்டாம். நிச்சயம் மன்னிப்பான்.

“தமக்குத்தாமே அநியாயமிழைத்துப் பாவங்கள் செய்து கொண்ட எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவனது மன்னிப்பை விட்டும்) நீங்கள் நிராசையடைந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்களது பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கக்கூடியவன்” (39:53)

99 கொலைகள் புரிந்த ஒரு மனிதனே பாவமன்னிப்பின்மீது ஆசைவைத்தபோது அல்லாஹ் அவனை மன்னித்தானாகில் நிச்சயமாக எமது பாவங்களையும் அவன் மன்னிப்பான்.

“பாலைவனத்தில் ஒட்டகையைத் தொழைத்தவன் மீண்டும் அதனைக்கண்டதும் எந்தளவு மகிழ்ச்சியடைகிறானோ அதனை விடவும் ஒரு அடியான் தன்னிடம் பாவமன்னிப்புக் கேட்கும்போது அல்லாஹ் மகிழ்ச்சியுறுகின்றான்”(முஸ்லிம்)

ஒரு அடியான் பாவம் செய்கிறான். பின்பு இறைவா என்பாவத்தை மன்னித்துவிடு என்று அல்லாஹ்விடம் மன்றாடுகின்றான். உடனே அல்லாஹ் “என் அடியான் பாவம் செய்து விட்டு அவனை மன்னிக்கவும் தண்டிக்கவும் ஒரு இறைவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டான் எனவேநான் அவனை மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

இவ்வாறு மூன்று முறை அவன் பாவம் செய்துவிட்டு அல்லாஹ்விடம் முறையிடுவான். அல்லாஹ்வும் அவனை மூன்று முறையும் மேற்கூறியவாறு கூறிவிட்டு மன்னித்துவிட்டு பின்பு ”ஏ அடியானே! நீ நாடியதைச் செய் நான் உன்னை மன்னித்துவிடுவேன்” என்று கூறுவான் (முஸ்லிம்)

ஆகவே அல்லாஹ் தனது அடியான் செய்யும் பாவங்களை அவன் பாவமன்னிப்புக் கேட்டால் மாத்திரம் மன்னிக்கக்காத்திருக்கின்றான். அவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டால் அதனை அவன் மன்னிக்கவேமாட்டான். எமது பாவங்களையும் முறையிட்டு மன்னிப்பு வேண்டிக்கொள்வோம்.


~ ஆலிப் அலி (இஸ்லாஹி) ~

0 comments:

Post a Comment