Monday, December 16, 2013



செல்கின்ற இடமெல்லாம் எமக்கு தெரிந்தவர்களே, எமது ஊரவர்களே, நாட்டவர்களே, கட்சியை, இயக்கத்தை சேர்ந்தவர்களே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சந்தர்ப்பங்கள், பதவிகள், வாய்ப்புக்கள், அதிகாரங்கள் நமக்கு தெரிந்தவர்களிடம் மாத்திரமே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது குறுகிய மனித பலவீனங்களின் வெளிப்பாடாகும்.

தகுதி, திறமை,ஆற்றல், அறிவு, ஞானம்,அதிகாரம் எங்கு எவரிடம் இருந்தாலும் அங்கீகரிக்கவும், அணுகவும், மதிக்கவும் கூடிய உளப்பக்குவமும்,தன் நம்பிக்கையும், பொது சன உறவுகளும் சிறு பிராயத்தில் இருந்தே வளர்க்கப் படல் வேண்டும், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இன்மை, பொது சன உறவாடல் பண்புகள் இல்லாமை, தயக்கம் கூச்சம் என்பனவே எம்மை இவ்வாறான குறுகிய மனப் பாங்களுக்குள் கட்டிப் போடுகின்றன.

இவ்வாறான மனப் பாங்குகள் பல்வேறு சமூக அநீதிகளுக்கு வழி கோலுகின்றன, தனி நபர்கள் மாத்திரமன்றி, நிறுவனங்களும், இயக்கங்களும், கல்லூரிகளும், பழைய மாணவர் அமைப்புக்களும் இந்த வட்டங்களில் இருந்து விடு படல் வேண்டும்.

குறுகிய இனவாதம், பிரதேச வாதம், நிறவாதம்,மொழி வாதம் போன்ற பெரிய வாதங்கள் போன்று இத்தகைய குறுகிய வாதங்களும் உயர்ந்த இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களுடன் முரண் படுகின்றன.

அறிமுகமாகிக் கொள்ளுங்கள்...எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள்...

தெரிந்தவர்களை மாத்திரமே தேடுவதை விட்டு விட்டு...

தெரியாதவர்களையும் புரிந்து கொள்ளுங்கள்...

விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்புங்கள்...

அநீதி எந்த வடிவில், எவர் மீது இழைக்கப் பட்டாலும் அதனை நிராகரியுங்கள்...









Ash Sheikh Dr. Masihudeen Inamullah PhD

0 comments:

Post a Comment