Sunday, January 29, 2017


 
விமர்சனங்கள், நாகரிகமின்மை, அனைத்துக்கும் காரணம் சகிப்பு தன்மையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிதான். அது மட்டுமல்ல முஸ்லிம்களில் அநேகர் சகிப்புத்தன்மையை கோழைத்தனம் என்றும் விளங்கி இருக்கின்றார்கள்.
சகிப்புத்தன்மை என்பது தோல்வியல்ல தனது கருத்தையோ அபிப்பிராயத்தையோ நிலைப்பாட்டையோ அறிவுபூர்வமாக முன்வைத்த பின் அந்த விளக்கம் ஜீரணிக்கும் வரை பொறுத்திருப்பதே சகிப்புத்தன்மையாகும்.
அதற்கு காலமெடுக்கலாம் அல்லது அது ஜீரணிக்காமல் போகலாம். அப்போது மீண்டும் அதே அறிவுபூர்வமான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமே தவிர அவசரப்படவோ, ஆத்திரப்படவோ, திணிக்கவோ, முரண்படவோ முற்படக் கூடாது என்பதுதான் சகிப்புத் தன்மையின் இரகசியம்.
முரண்பட்ட வெவ்வேறு இலட்சியங்கள், சிந்தனைகள், முகாம்களை உடையவர்களே தமக்கிடையில் சகிப்புத் தன்மையோடு செயலாற்றி வெற்றி பெறுகின்றார்கள். ஒரே இறைவன், ஒரே வேதம், ஒரே கிப்லாவுடையவர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை வற்றி வரண்டு போயிருக்கின்றது.
 
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

0 comments:

Post a Comment