Tuesday, September 29, 2020


உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் எழுச்சியை கருவாக வைத்து
Diriliş Ertuğrul
(Resurrection: Ertuğrul) என்ற பெயரில் ஒரு TV Drama துருக்கியின் பிரதான தொலைகாட்சி நிறுவனமான
TRT World
இன் தயாரிப்பில் 2014 ம் ஆண்டில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.
Mehmet Bozdağ
(Film Producer & Director) என்ற தற்போது (2020 ல்) 37 வயதாகும் இளைஞனின் இயக்கத்தில் உருவாகிய இத்தொடர் உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளன (உலக சனத்தொகையில் 1/3 பகுதியினர்). இது உலக நாடக வரலாற்றில் மிகச் சிறந்த தொடர் எனும் உலக சாதனையாக பதிவாகிறது. இதுவரை உலகளவில் 39 மொழிகளில் வெளிவந்துள்ளன. (தமிழ் மொழியில் இன்னும் இல்லை & English Subtitle உடன் பார்வையிடலாம்.)
 
Resurrection: Ertugrul, making strides in the T.V industry across the world, especially the Muslim world, has now achieved its greatest milestone as the Turkish drama has been added to the Guinness Book of World Records as the best dramatic work to date, with views reaching 3 billion and the show having been translated into 39 different languages, reported media.
 
Ottoman Empire (the war machine) இன் அடித்தளம் சதித்திட்டங்கள், துரோகங்கள், காட்டிக்கொடுப்புகள், அநீதி, ஏமாற்றங்கள், சிலுவையினரின் போலி முகங்கள், மொங்கோலிய படையெடுப்புக்கள், பேராசைகள், போட்டி பொறாமைகள் போன்ற பல சவால்களை வெற்றிகொண்டு. சன்மார்க்க வழிகாட்டல்களின் அடிப்படையில் நீதி நேர்மை, மனித நேயம், வீரம், சாதனைகள், இலட்சிய வேட்கை, தூர நோக்கு... போன்றவற்றால் கட்டியெழுப்பப்பட்டு உலக வரலாற்றில் ஆறு நூற்றாண்டுகள் நிலைத்திருந்த மாபெரும் சாம்ராஜ்யமான உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் (1299 - 1923) ஆரம்பகர்த்தாவாகிய முதலாவது சுல்தான் Osman Ghazi (1258 - 1324) அவர்களின் தந்தையாகிய Ertuğrul Ghazi (1198 - 1280) அவர்களின் (உண்மை சம்பவங்கள் அடங்கிய) வாழ்க்கை வரலாறு.
 
The series is woven around 13th century Anatolia and tells the story prior to the establishment of the Ottoman Empire. It illustrates the struggle of Ertuğrul Ghazi, father of the empire’s founder.
 
150 அத்தியாயங்கள் அடங்கிய 05 Season களாக (அண்ணளவாக 40 - 45 நிமிடங்களைக் கொண்ட சுமார் 450 Episodes) வெளிவந்துள்ள இத்தொடரை பார்க்க ஆரம்பித்தாள் அனைத்தையும் பார்த்து முடிக்கும் வரை நிறுத்த மாட்டீர்கள். அவ்வளவு நேர்த்தியாகவும், சுவாரசியங்கள், திருப்பங்கள் நிறைந்ததாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இத்தொடருக்கு (Egypt, Saudi Arabia, United Arab Emirates...) போன்ற சில அரபு நாடுகள் தடைவிதித்துள்ளமையும் எதிராக மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் இந்த தொடர் உலகளவில் சுமார் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளன. 
 
1,000 மார்க்க சொற்பொழிவுகளை விடவும் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் பண்பாடுகள், விழுமியங்கள், வழிகாட்டல்கள், தனித்துவங்கள், சிறப்பம்சங்கள், கலை கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன விடயங்களை மிகச் சிறப்பான வகையில் செதுக்கி இக்காலத்திற்குப் பொருத்தமான வகையில் முன்வைக்கும் ஒரு கலைப் பொக்கிஷம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
 
~ mrm

 

0 comments:

Post a Comment