Thursday, March 13, 2014




ஒருநாள் உமர் (றழி) அவர்களின் தூதுக்கோஷ்டி ஒன்று போராட்டக் களத்திலிருந்து வெற்றிச் செய்தியுடன் திரும்பி வந்தது. உமர் (றழி) அவர்கள் அவர்களிடம்; "எப்போது போராட்டம் ஆரம்பித்தது? " எனக் கேட்டார்கள்.


அதற்கவர்கள், "ழுஹா நேரத்திற்கு முன்னர்" எனக் கூறினார்கள்.


"வெற்றி எப்போது கிடைத்தது?" எனக் கேட்டார்கள்.


"மஃரிபிற்கு முன்" என அவர்கள் பதிலளித்தார்கள்.


இதனைக் கேட்ட உமர் (றழி) அவர்கள், தாடி நனையும் அளவுக்கு கடுமையாக அழுதார்கள். "நாங்கள் வெற்றிச் செய்தியை சுபசோபனமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்க ஏன் அழுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள் அந்த தோழர்கள்.


உமர் (றழி) அவர்கள் சொன்னார்கள்: "அல்லாஹ் மீது ஆணையாக! நீங்களும் நானும் பாவங்கள் செய்திருக்காவிட்டால் அசத்தியம் இவ்வளவு நேரம் சத்தியத்திற்கு முன்னால் தாக்குப்பிடித்திருக்க மாட்டாது."



தொடர்ந்து கூறினார்கள்: -


"நாம் யுத்த தளபாடங்களையோ படையணியிலுள்ளவர்களின் எண்ணிக்கையை நம்பியோ வெற்றி பெறும் சமூகமல்ல.எமது பாவங்களின் குறைவு காரணமாகவும் எமது எதிரிகளினுடைய பாவங்களின் அதிகரிப்பின் காரணத்தினாலுமே நாம் வெற்றி பெறுகிறோம்.பாவங்களின் எண்ணிக்கை சமனிலையடைந்து விட்டால் எதிரிகள் ஆயுதங்களையும் படைபலத்தையும் கொண்டு எம்மை வெற்றி கொண்டு விடுவர்" எனக் கூறினார்கள்.

~ அபூ R அப்துல்லாஹ் ~

0 comments:

Post a Comment