Tuesday, March 11, 2014



விமர்சனம் மட்டும் செய்தால் தீமைகள் அகன்றுவிடும் என எண்ணுவது சரியல்ல; எந்த ஒரு மாற்றத்துக்கும் தீவிர உழைப்பை இறைநியதி வேண்டுகிறது.

முயற்சி இல்லாமல், பாதையில் தென்படும் ஒரு சிறு முள்ளையோ கல்லையோ கூட உங்களால் அப்புறப்படுத்திவிட முடியாது. அப்படி இருக்க வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் சமூகச் சீர்திருத்த்தம் எனும் பெரும் பணியில் வெற்றியை எப்படி அடைந்திட முடியும்?

மும்முரமான உழைப்பில்லாமல் ஒரேயொரு தானிய மணியைக்கூட விவசாயியினால் உற்பத்தி செய்ய முடிவதில்லை! செயல்கலத்திலிருந்து ஒதுங்கியிருந்துகொண்டு செய்யும் வெறும் பிரார்த்தனைகளாலும் - ஏங்குகின்ற ஆசைகளாலும் சமூகம் எனும் வயலில் புனிதத்தன்மை, நேர்மை எனும் காதீர்களை கொண்ட பசுமையான - கண்ணை குளிர வைக்கும் பயிர்கள் படர முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்?

விமர்சனங்கள் எப்போது பலன் தரும்?
காரண காரியங்கள் கொண்ட உலகில் நமக்குரிய பாணியை நாம் மனமார முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். பிறகு, அது கனி தர வேண்டும் என இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். அப்போதுதான் நம்முடய விமர்சனங்களும் பலன் தரக் கூடியதாக இருக்கும்.

ஐய்யமின்றி நம் உதவிக்காக வானவர்கள் இறங்கத் தான் செய்கிறார்கள். ஆனால் தாமே போர் புரிவதட்கல்ல! மாறாக, அல்லாஹ்வின் பாதையில் சாத்தியப் பதாகையை ஓங்கிப் பிடித்துக் கொண்டு தம் உயிரைப் பணயம் வைத்து, போராடிக் கொண்டு இருக்கும் சத்திய சீலருக்கு உதவுவதற்காகத்தான் இறங்குகிறார்கள்!

ஆகவே செயல் புரிவதற்கு ஆர்வம் கொண்டோர் எல்லோரும், காரணப் பொருத்தம்மில்லாத எதிர்பார்ப்புக்கள், ஏங்கும் ஆவல்கள் ஆகியவற்றிலிருந்து தங்களை விளக்கிக் கொண்டு ஆர அமர இலட்சியப் பணியின் தோட்டங்கள் என்ன என்று நான்கு புரிந்து கொள்ள வேண்டும்...

"இயக்கம் வெற்றி பெற..." என்ற நூலில் இருந்து

0 comments:

Post a Comment