சாணக்கியமான வழிமுறை சாதிக்க வழி
நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் அக்கால மக்களை தனது மதிநுட்பமிக்க சாணக்கியமான வழிமுறைகள் மூலம் வெற்றி கொண்டார்கள்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்னாரின் அன்பான வழிமுறையின் முன் போர் வெறியோடு இருந்த எதிரிகள்கூட சரணடைந்தனர்.
வீரத்தோடும் விவேகத்தோடும் எதையும் எடுத்தாளும் அழகிய வழிமுறையினால் தோழர்கள் ஈர்க்கப்பட்டனர்.
எளிமையும் இலகும் அழகும் கொண்ட அருமையான அமைதியான அணுகுமுறை அரசர்களுக்கெல்லாம் ஆச்சரியமாக அமைந்தது.
யுத்தத்தில் எதிரிகளோடு நடந்து கொண்ட முறையும் மன்னிப்பும் நபியவர்கள் பற்றிய தவறான புரிதல்களைக் களையவும் தமது தவறான கொள்கைகளிலிருந்து விடுபடவும் உதவியது.
சாணக்கியமான வழிமுறை சாதிக்க வழி
எனவே, நாமும் சாதிக்க சாணக்கியமான வழிமுறையைப் பின்பற்றுவோம்.
மூலம் : islamicview.org

0 comments:
Post a Comment