Sunday, August 25, 2013





வெற்றியாளன் தீர்வைப் பற்றி யோசிப்பான்
தோல்வியாளனோ பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பான்.

வெற்றியாளன் பிறருக்கும் உதவிக் கொண்டிருப்பான்
தோல்வியாளன் பிறரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பான்.


வெற்றியாளன் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வைக் கொண்டிருப்பான்
தோல்வியாளனோ ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினையைக் காண்பான்.

வெற்றியாளன் நிறைவேறக்கூடிய கனவுகளைக் காண்பான்
தோல்வியாளனோ பிரமையில் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்.


வெற்றியாளன் பிறர் தன்னோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றானோ அதே போல் அவர்களோடு நடந்து கொள்வான்
தோல்வியாளனோ பிறர் தன்னை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்து அவர்களை ஏமாற்றுவதற்கு முந்திக் கொள்வான்.

வெற்றியாளனது தனது வேலையில் எதிர்ப்பார்ப்புடன் செயற்படுவான்
தோல்வியாளனோ தன் வேலையை சலிப்புடன் முன்னெடுப்பான்.


வெற்றியாளர்கள் நிகழ்வுகளை தோற்றுவிப்பார்கள்
தோல்வியாளர்கள் நிகழ்வுகளால் இயங்கிக் கொண்டிருப்பர்.

வெற்றியாளனின் கூற்று : '' தீர்வு கடினமானது - என்றாலும் முடியுமானது''
தோல்வியாளின் கூற்று : '' தீர்வு முடியுமானது - என்றாலும் கடினமானது'' என்பதாக இருக்கும்



மூலம் : அம்ரு காலிதின் கட்டுரை ஒன்றிலிருந்து...

0 comments:

Post a Comment