Monday, August 26, 2013



கேள்வி:
அல்லாஹுத்தஆலா பாவியொருவனிடமிருந்து இபாதத்களையும் தவ்பாவையும் ஏற்றுக்கொள்வானா? அல்லாஹ் அவனை இம்மையிலும் மறுமையிலும் எவ்வாறு நோக்குவான்?


தில்:
அல்லாஹுத்தஆலா ஒவ்வொருவரிடமிருந்தும் அவரது தவ்பாவை அது உண்மையானதாக இருந்தால், அதனுடைய நிபந்தனைகள் ஐந்தும் பூர்த்தியாக்கப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்வான்.

அவை:

1. அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணம்; அவன் தன் தவ்பாவின் மூலமாக எவ்வித உலக இலாபங்களையோ அல்லது செல்வங்களையோ எதிர்பார்க்கக் கூடாது.

2. செய்த பாவத்தை எண்ணிக் கைசேதப்பட வேண்டும். ஏனெனில் கைசேதப்படுவதுதான் அவனது தவ்பாவின் உண்மைத்தன்மைக்கான சான்றாகும்.

3. உடனே அப்பாவத்தை விட்டும் நீங்கிவிட வேண்டும். முக்கியமான விடயம் என்னவெனில் அது மற்ற மனிதர்களோடு சம்பந்தப்பட்டிருப்பின் அவை நிவர்த்திக்கப்பட வேண்டும்.

4. எதிர்காலத்தில் அப்பாவத்தின் பக்கம் மீள்வதில்லையென உறுதிபூண்டுகொள்ள‌வேண்டும்.

5. தவ்பா அதற்குரிய நேரத்தில் செய்யப்பட வேண்டும். பொதுவாக அது மஃரிபிலிருந்து சூரியன் உதிப்பதற்கு முன்னரானதாக இருக்கும். குறிப்பாக மனிதனின் மரணத்துக்கு முன்னர் அது அமைந்துவிட வேண்டும். அதனைத்தான் அல்லாஹுத்தஆலா இவ்வாறு கூறுகிறான்:

"மரணம் ஒருவரிடத்தில் வரும் வரையில் பாவங்களை செய்துகொண்டே, நான் இப்போது தவ்பா செய்கிறேன் எனக் கூறும் ஒருவருக்கு தவ்பா இல்லை." (அந்நிஸா:18)

இந்த நிபந்தணைகள் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டால், நிச்சயமாக அத்தவ்பாவை ஏற்றுக்கொள்வான். அவனது பாவங்கள் எவ்வளவு அதிகரித்திருந்தாலும் சரியே.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: "தங்கள் மீது அளவுகடந்துவிட்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளின் மீது நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னித்துவிடுவான் அவன்தான் மிக்க மன்னிப்பவன். மிகக் கிருபையுடைய‌வன்" (அல்ஜுமர்:53)


~ ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் ~

0 comments:

Post a Comment