Sunday, August 25, 2013



ஐரோப்பா அஞ்ஞானத்திலும் இருளிலும் மூழ்கியிருந்தது. ஆபிரிக்கா அறிவியல் துறைகளில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஐரோப்பா மடமையிலும் பின்னடைவிலும் இருந்ததையும் ஆபிரிக்கா விஞ்ஞானத்திலும் அபிவிருத்தியிலும் முன்னின்றதையும் நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!!!

அநியாயம் நிறைந்த ஆட்சி நடந்து கொண்டிருந்த ஐரோப்பாவிலுள்ள ஸ்பெய்னிலிருந்து நாகரிக ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த ஆபிரிக்க அதிபருக்கு ஓர் அழைப்பு வருகிறது.

"எங்களை இந்த அநியாயக்கார ஆட்சியிலிருந்து காப்பாற்றுங்கள்." இதுதான் அந்த அழைப்பு

அநியாயத்தை அழிக்க தைரியத்தோடும் துணிவோடும் புற்பட்டது ஆபிரிக்க அதிபரின் இளந்தளபதி தாரிக் பின் ஸியாதின் தலைமையில் சிறிய இராணுவம்.

ஸ்பெனுக்கு சென்று ஸ்பெய்னை வென்று ஸ்பெய்னை ஆட்சி செய்தது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால், சிறிய தொகையினராக இருந்து நீதிக்குக் குரல் கொடுத்து நீதியாக இருந்தவர்களுடன் இணைந்து முழு நாடும் வாழ்ந்தது அதிசயமே!

அங்கு கிறிஸ்தவர், யூதர், முஸ்லிம் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தனர்.

அது ஒரு அழகிய பொற்காலம்

0 comments:

Post a Comment