Monday, August 26, 2013



ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை (கூட்டுத்) தொழுகைக்கு வராமல் நான் தாமதித்து விடுகிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின் போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒரு போதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், “மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும், பலவீனரும், அலுவல் உடையோரும் உள்ளனர்” என்று சொன்னார்கள்.




 

அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி)
நூல்: புகாரி 7159

0 comments:

Post a Comment