Sunday, August 25, 2013



மன்னிக்கும் இரட்சகனுக்காய்
தூய தேசமொன்றைத் தேடி 
பயணிக்கின்ற பயணமிது.

அந்த நாளையின் விடியலுக்காகவே
இன்றைகளை நாம்
சுவாசித்து நேசிக்கிறோம்.

அந்த விடியல் நமக்குரியது
என்பதில் நம்பிக்கையோடிருக்கிறோம்.


காத்திருக்க இனியெமக்கு 
கனப்பொழுதேனுமில்லை.

கடமைகள் மறந்து 
கல்பிலவை கனத்து 
சோர்வுடன் எமக்கு 
இந்தப் பயணம் சுமை தரவில்லை.

பறக்க வழி தெரியாத போது
சிறகு சுமையாக வாய்ப்பில்லை.

சத்தியத்தைச் சுமப்பதில்தான்
மெய் சந்தோசமிருக்கிறது.


உம்மத்தின் அகராதியில்
சோதனைகளின் வரலாறு
காலம் கடந்து இன்னும் நீள்கிறது.

ஒரு தூய தேசத்தின் விடியலில்தான்
இந்த வேதனைகளின் ஓலங்கள்
சுகானுபவமாக மறும்

"இன்ஷா அல்லாஹ்"


~ முனா ~

0 comments:

Post a Comment